NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வஸ்கடுவ கடற்கரையில் 20 கிலோ எடையுள்ள ஆமையொன்றும், டொல்பினொன்றும் கரையொதுங்கின!

வஸ்கடுவ கடற்கரையில் இன்று (15) 5 அடி நீளம் கொண்ட டொல்பினொன்றும், 20 கிலோ எடையுள்ள இறந்த ஆமை ஒன்றும் கரை ஒதுங்கியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

டொல்பினின் துடுப்பு மற்றும் அதன் உடலின் பல பாகங்களில் காயங்கள் காணப்பட்டிருந்த அதேநேரத்தில் ஆமையின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து அத்திடிய வனவிலங்கு அதிகாரிகள் வந்து அந்த டொல்பினை வனவிலங்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Share:

Related Articles