NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாகன இறக்குமதி குறித்த வேலைத்திட்டங்களுக்கு குழு நியமனம்!

எதிர்காலத்தில் வாகன இறக்குமதி குறித்த வேலைத்திட்டங்களை வகுப்பதற்காக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (14) குழுவொன்று நியமிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நேற்று சனிக்கிழமை (15.06) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது,நாட்டின் நிதி மூலோபாயங்களை வழிநடத்தி வரும் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இடம்பெற்று வரும் கலந்துரையாடல்களையும் விளக்கப்படுத்தினார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் மேற்கொள்ளப்படும் வாகன இறக்குமதியின் நேரடி தாக்கங்களை கருத்திற்கொண்டு வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் திட்டமொன்று சமர்ப்பித்துள்ளது. 

சாலை வரைபடத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட முறையைப் பின்பற்றி, பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

நியமிக்கப்பட்டுள்ள குழுவில் நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, வாகன இறக்குமதி துறைகளின் பிரதிநிதிகள், வாகன விநியோகஸ்தர்கள், கைத்தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு போன்ற முக்கிய பங்குதாரர்கள் உள்ளனர்.” என இராஜாங்க அமைச்சர் கூறினார். 

முதலில் பொது போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து மற்றும் பொது மக்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் போன்ற பொதுவான மாற்றுகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் சொகுசு வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் அவற்றின் பொருளாதார தாக்கங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Related Articles