NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாகன ஓட்டுநர்களுக்கான அறிவித்தல்!

இன்னும் புதுப்பிக்கப்படாத வாகன வருமான உரிமப்பத்திரம் குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

5 வருடங்களுக்கு மேலாக வருமான உரிமம் புதுப்பிக்கப்படாத வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஏறக்குறைய 8.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 6.3 வாகனங்கள் ஞசு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஐந்து வருட காலத்திற்கு வாகன வருவாய் உரிமத்தை புதுப்பிக்கத் தவறிய வாகனங்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Share:

Related Articles