NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நோட்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா வீதி மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் றிவுறுத்தியுள்ளனர்.

இன்று (27) அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக நோர்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா பிரதான வீதியில் தியகல, கினிகத்ஹேன ஊடாக தியகல டப்லோ தோட்டப் பகுதியில் இருந்து கற்கள் மற்றும் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நோட்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா வீதியை மூட பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

வீதி புனரமைக்கப்படும் வரை, ஹட்டனில் இருந்து நோட்டன்பிரிட்ஜ் நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஹட்டனில் இருந்து காசல்ரீ, ஒஸ்போர்ன் ஊடாக வந்து நோட்டன்பிரிட்ஜ் ஊடாக செல்ல முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பில் இருந்து நோட்டன்பிரிட்ஜ் வரை பயணிக்கும் வாகனங்கள் களுகல சந்தியிலிருந்து பொல்பிட்டிய சந்தியை அடைந்து டபுள்குட்டின் சந்தி ஊடாக லக்ஷபான வீதி ஊடாக நோட்டன்பிரிட்ஜ் வரை செல்ல முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share:

Related Articles