NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாக்குவாதத்தால் பறிபோன உயிர்.

இந்தோனேசியாவில் இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஒருவர் மற்றொருவரை கொலை செய்துள்ளார்.

இருவரும் உரையாடிக் கொண்டிருந்த போது, முதலில் வந்தது முட்டையா அல்லது கோழியா? என ஒருவர் கேள்வி எழுப்பட்டுள்ளது.

இருவரிடையேயான பதில்கள் வேறுபட்டதால் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.இந்த வாக்குவாதம் தீவிரமடைந்ததை தொடர்ந்து மற்றைய நபர் விவாதம் செய்ய விரும்பாது அந்த இடத்திலிருந்து செல்ல முயற்சித்த போது கேள்வி எழுப்பிய நபர் கோபத்தில் தனது நண்பரை கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவரது குற்றம் நிருபிக்கப்படுமாயின் அவருக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Related Articles