பாராளுமன்றில் இடம்பெற்றுவரும் வாய்மூல கேள்வி பதிலுக்கான நேரத்தின் போது குறிக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனக்கு உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கி தரப்படவில்லை என்பது தொடர்பாக டிசம்பர் 18ஆம் திகதி தான் கடிதமொன்றை கையளித்திருந்ததாக சபாநாயகரிடம் தெரிவித்தார்.
அத்துடன், ஜனவரி 7ஆம் திகதியான இன்று வரை தனக்கு அதுதொடர்பில் எந்தவிதமான பதிலும் வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இதுவரை வழங்கப்படாத பதிலின் காரணமாக, தான் யாழ்ப்பாணத்தில் இருந்து பாராளுமன்றம் வந்துபோவதும் வீண் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தந்து மேலே அண்ணாந்து பார்த்த வண்ணம் செல்வதில் எந்த பயனுமில்லை என்றும் குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர், இதுதொடர்பாக பதிலளிக்க கோரி தாம் எதிர்கட்சி தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் குழுவொன்றை நியமித்து ஆராயப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.