NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மக்களவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். 

பதினெட்டாவது இந்திய மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தற்போது வரை நான்கு கட்டங்கள் நிறைவடைந்திருக்கிறது. அடுத்த கட்டத் தேர்தல் மே இருபதாம் திகதியன்று நடைபெறுகிறது. 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இரு முறை போட்டியிட்டு வென்ற வாரணாசி தொகுதியில் மீண்டும் களம் இறங்குகிறார். ஜூன் ஒன்றாம் திகதியன்று இங்கு தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அங்கு  வருகை தந்தார். அவரை பாரதிய ஜனதா கட்சியினரும், உத்தரபிரதேச மாநில முதல்வர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் வரவேற்றனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியையும், காலபைரவர் ஆலயத்திற்கு சென்று கால பைரவரையும் வணங்கிய பிரதமர் நரேந்திர மோடி, பின் வாரணாசி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். 

இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரியான ராஜலிங்கத்திடம் தனது வேட்பு மனுவை பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்தார். 

Share:

Related Articles