NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்பு

கண்டிஇ பல்லேகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று பிற்பகல் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை எனபல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 5 அடி உயரமுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சடலமானது பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles