NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விசேட வைத்தியர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை சேவைகளில் பாதிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

விசேட வைத்தியர்கள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் சிகிச்சைச் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதான வைத்தியசாலைகளிலும் கூட விசேட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அதன் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

30 விசேட வைத்தியர்கள் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் விசேட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வுபெற்ற விசேட வைத்தியர்களை மீள வேலைக்கு அமர்த்த முடியுமா? என்பது குறித்து ஆராயப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, விசேட வைத்தியர்களின் ஓய்வூதிய வயதை 63 ஆக நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles