32ஆவது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
லீக் சுற்று முடிவில் குஜராத், மராட்டியம், கர்நாடகா, பஞ்சாப, விதர்பா, பரோடா ஆகிய அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன.
2ஆவது இடம் பிடித்த அரியானா, இராஜஸ்தான், தமிழ்நாடு, பெங்கால் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி கண்டன.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று இரண்டு பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் கோதாம்பி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் முன்னாள் சம்பியன் தமிழ்நாடு, இராஜஸ்தானை எதிர்கொள்கிறது.
மோடி பாக் ஸ்டேடியத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அரியானா, முன்னாள் சம்பியன் பெங்காலை சந்திக்கிறது.