NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் பதித்த ஆடையுடன் வந்தவர் கைது!

கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே, செவ்வாய்க்கிழமை (28) இராணுவ புலனாய்வு பிரிவினரால்  கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ். கொடிகாமம் பகுதியில் நேற்று இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படம் பொறித்த ஆடை அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபரிடம் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles