ஆறு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் தனது குழுவுடன் கிறிஸ்மஸ் கொண்டாடிய காணொளியை நாசா வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் பூமியில் இருக்கும் மக்களுக்கு கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர் தனது குழுவுடன் இணைந்து விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ள காணொளி இணைய தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.