NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பிய சீனா !

விண்வெளி ஆதிக்கம் அதிகரிப்பின் காரணமாக விண்வெளி ஆராய்ச்சியில் சீனா முழு வீச்சில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் ரஷ்யாவின் உதவியுடன் டியான்காங் என்ற விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக விண்ணில் நிறுவியது.

அதன்பிறகு விண்வெளி ஆராய்ச்சிக்கான முயற்சியில் விண்வெளி வீரர்களை சோதனை முறையில் டியான்காங் நிலையத்திற்கு சீனா அனுப்பியுள்ளது.

முதற்கட்டமாக வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2 எப் என்ற ரொக்கெட்டினை டியான்காங் நிலையத்திற்கு ஏவியுள்ளது.

ஷென்ஜோவ்-17 என்ற விண்கலத்தை சுமந்து செல்லும் இந்த ரொக்கெட்டில் சீன விண்வெளி வீரர் டாங் ஹாங்போ (வயது 48) என்பவர் சீனாவின் இலட்சிய திட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்துகிறார்.

முன்னாள் சீன விமானப்படை போர் விமானியான அவர் 6 மாதங்கள் டியான்காங் நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளார்.

அவருடன் இரு இளம் வீரர்களான தெங் சென்ங்ஜி (33), ஜின்லின் (35) ஆகியோர் சென்றுள்ளனர். இருவருக்கும் இது முதல் விண்வெளி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles