NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விபத்தில் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் படுகாயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வெல்லவாய – மொனராகலை வீதியின் மதுரகெட்டிய பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் ஒன்றும் கெப் வண்டியும் மோதியதில் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உதயகுமார படுகாயமடைந்த நிலையயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலையிலிருந்து வெள்ளவாய நோக்கி பயணித்த பஸ்ஸும் வெல்லவாயவிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த கெப் வண்டியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles