NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விமல் வீரவன்ச MP நீதிமன்றில் முன்னிலையானார்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சைட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களின் அடக்குமுறைகளை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கடந்த 19ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

Share:

Related Articles