விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அண்மைய நாட்களில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்காக, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, பயணிகள் தங்கள் இறுதி இலக்கை அடைய உதவுவதற்காக மாற்று பயண ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாடிக்கையாளர்களின் பொறுமைக்கு நன்றி தெரிவித்து, இடையூறுகளுக்கு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளது.