NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விமான நிலையங்களில் புதிய நடைமுறை அறிமுகம்

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்து செல்வதற்கும் புறப்படுவதற்கும் புதிய கடவுச்சீட்டு முத்திரைகளை இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவிக்கையில், “2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தற்போது இலங்கையில் உள்ள ஏனைய சர்வதேச விமான நிலையங்களிலும் புதிய முத்திரைகளின் பாவனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வருகைக்காக நீல நிற முத்திரையையும் புறப்படுவதற்கு பச்சை நிற முத்திரையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தைத் தவிர, துறைமுகங்கள் மற்றும் பயணிகள் பயணக் கப்பல்களுக்கும் இதேபோன்ற முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு துறைக்கும் மூன்று தனித்தனி முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய முத்திரைகள் அறிமுகம் குறித்த விவரங்களை அளித்த அவர், 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முத்திரையை விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பயன்படுத்தி வருவதாகவும், தற்போது அது பல்வேறு தரப்பினரால் எளிதில் தவறாக பயன்படுத்தப்படுகின்றது.

பழைய முத்திரையில் முறைகேடு நடப்பதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ள போதிலும், புதிய முத்திரைகளை அறிமுகம் செய்வதில் பல வருடங்களாக தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

புதிய முத்திரைகளை விரைவில் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் நகல் எடுக்க முடியாத வகையில் அவை உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Share:

Related Articles