NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வியட்நாமில் பயங்கர தீ விபத்தில் சிக்கி 50 பேர் பலி!

வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ இந்த விபத்தில் சுமார் 50 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

10 மாடி கட்டடத்தின், வாகன தரிப்பிட தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அது வேகமாக கட்டடம் முழுவதும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்புப்படையினர் 70 பேரை மீட்டனர். அவர்களில் 54 பேரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அதில் பலர் உயிரிழந்ததாக, அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Share:

Related Articles