NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விரலைத் துண்டித்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்… !

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், உடஹமுல்ல இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நடத்துனர் ஒருவரின் விரலை கத்தியால் வெட்டி 7,300 ரூபாவை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இங்கிரிய, உறுகல பகுதியைச் சேர்ந்த, காயமடைந்த நடத்துனர், சிகிச்சைக்காக ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிரிய- ஹெட்டியாவத்தை 176 வழிதடத்தில் இங்கிரிய நகரிலிருந்து காலை தனது பயணத்தை ஆரம்பிக்கும் பேருந்து சேவையாற்றும் நடத்துனர். தனது வீட்டிலிருந்து முச்சக்கரவண்டியில், நகரத்துக்கு வந்துள்ளார்.

முச்சக்கரவண்டியை வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் நிறுத்திவைத்துவிட்டு, பயணச்சீட்டு இயந்திரத்தை எடுத்துக்கொண்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்திற்கு வந்துக்கொண்டிருந்தபோதே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரது கையொன்றில் விரலை துண்டித்துவிட்டு, பணத்தை அபகரித்துச் சென்றுள்ளனர்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles