NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விவாத சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக வியட்நாம் நோக்கி புறப்படவுள்ள இலங்கை விவாதக்குழு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

2023ஆம் ஆண்டுக்கான உலக பாடசாலைகள் விவாத சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை விவாதக்குழு எதிர்வரும் 16ஆம் திகதி வியட்நாம் நோக்கி புறப்படவுள்ளது.

அணித் தலைவர் சனிது ரத்நாயக்க மற்றும் அஃப்ரா அதா{ஹரஹ்மான், அஷ்வின் லக்சுமானகே, சனித்ம ஜயசூரிய, தித்திர ஜயகொடி மற்றும் அம்மார் சஃபருல்லா இதில் பங்குக்கொண்டுள்ளனர்.

பயிற்சியாளர் குழுவில் தலைமைப் பயிற்சியாளர் வீரேன் பேருவலகே மற்றும் உதவிப் பயிற்றுவிப்பாளர்களான ஜனுல் டி சில்வா மற்றும் ஹுமைட் சலீம் ஆகியோர் விளங்குகின்றனர்.

உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக கடந்த வார இறுதியில் இலங்கை அணி தனது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.

சிங்கப்பூரை இரண்டு முறையும், அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவையும், இறுதிப் போட்டியில் பிலிப்பைன்சையும் தோற்கடித்து வெற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles