NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகளுக்குப் பூட்டு!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் வெசாக் வாரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில்  மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெசாக் பண்டிகை தினங்களில் இறைச்சிக் கடைகளும்   மூடப்படும்.

இம்முறை வெசாக் பண்டிகைக்கான அலங்காரங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

Share:

Related Articles