வவுனியா வடக்கு – ஒலுமடு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ்மக்கள் நிம்மதியான முறையில் வழிபடுவதற்கான வழிவகைகளை செய்யுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை பதிவுசெய்யவும், ஆலயத்திற்கான காணியை வனவளத் திணைக்களத்திடமிருந்து விடுவிக்கவும், ஆலயவளாகத்தில் குழாய்க்கிணறு அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.
மேலும், ஆலயத்திற்கான பிரதான வீதியை சீரமைக்கவும், மலையுச்சியிலுள்ள சிவலிங்கத்திற்கு ஏற்கனவே இருந்ததைப் போன்று சிறிய கூடாரம் அமைக்க அனுமதியளிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.