NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெப்பமான காலநிலையால் நீர் விநியோகத்தில் அவ்வப்போது தடைகள் ஏற்படலாம் – தேசிய நீர் வழங்கல் சபை அறிவிப்பு..!

நாட்டில் தற்போதைய நாட்களில் நீர் பாவனை அதிகரித்துள்ளதால் நீர்விநியோக அமைப்பில் அவ்வப்போது குறைந்த அழுத்த நிலைகள் அல்லது அதிக உயரமான பகுதிகளுக்கான நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு நாளும் கணிசமான நேரத்திற்கு நீர் விநியோகம் தடைபடுவதாகவும் மேலும் நீர் வழங்கல் சபையால் அடையாளம் காணப்பட்ட உயரமான பகுதிகளில் வசிக்கும் நுகர்வோருக்கு தண்ணீர் பவுசர்கள் மூலமாக நீரை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய நாட்களில் நீர் பாவனை அதிகரித்துள்ளதுடன், நீர் விநியோகம் குறைவாக இருப்பதால், வாகனங்களை கழுவுதல், தோட்டக்கலை போன்ற நடவடிக்கைகளுக்கான நீர் பயன்பாட்டைக் குறைத்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இதனூடாக, நீர் விநியோக அமைப்பில் நீர் அழுத்தத்தை உகந்த அளவில் பராமரிக்க முடியுமெனவும் அவசரநிலைகளைச் சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீர் வழங்கல் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவாக இருந்தாலும், மக்களின் நீர் நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ள போதிலும் நீர் உற்பத்தியில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை எனவும் சாதாரண அளவை விட சுமார் 102 மடங்கு அதிகளவில் நீர் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த வறட்சியான காலநிலையால் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் குறைக்கப்பதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் நீர் வழங்கல் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles