(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெலிகம – அக்குரஸ்ஸ வீதியில் உள்ள பிடதெனிய என்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்னால் துரத்திச் சென்ற இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரது சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையில் பிரதேச பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







