NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெலிமடையில் பஸ்கள் மோதி விபத்து – 11 பேர் காயம்

வெலிமடை – அம்பகஸ்தோவ பகுதியில் நேற்று பிற்பகல் இரண்டு பஸ்கள் மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

மெதவெலயிலிருந்து – வெலிமடை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றும் ஓல்டிமாரிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் 7 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்தவர்கள் வெலிமடை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share:

Related Articles