NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி: டிரம்ப் அறிவிப்பு.!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது டிரம்ப்பின் பார்வை திரைப்படத்துறை மீது திரும்பி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

அமெரிக்க திரைப்படத்துறை மிக வேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. நமது திரைப்பட தயாரிப்பாளர்களையும், ஸ்டுடியோக்களையும் மற்ற நாடுகள் அமெரிக்காவில் இருந்து பிரிக்க அனைத்து வகையான சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் ஹாலிவுட் உள்பட திரைப்பட துறை அமெரிக்காவிற்குள் பேரழிவுக்கு உள்ளாகி வருகிறது.

இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி ஆகும். இது அமெரிக்க திரைப்பட துறைக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

மற்ற நாடுகளிடம் இருந்து போட்டி தீவிரமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனை உடனடியாக செயல்படுத்த வணிகவரித்துறை மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கு நான் அதிகாரம் அளித்து உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles