பயிர்கள் மற்றும் மரக்கறிகளை சேதப்படுத்தும் மரங்கொத்திகள், மயில்கள், காட்டுப்பன்றிகள் மற்றும் முள்ளம்பன்றிகள் போன்ற விலங்குகளை வெளிநாடுகள் கோரினால் ஏற்றுமதி செய்ய தயார் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் தென்னைச் செய்கைக்கு மிகப்பெரும் சேதம் விளைவிப்பவையாக குரங்குகளும் மற்றும் மர அணில்களுமே காணப்படுவதாக, ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 93 மில்லியன் தேங்காய்கள் குரங்குகள் மற்றும் வெட்டுக்கிளிகளால் அழிக்கப்பட்டுள்ளதாகவும், 2022ஆம் ஆண்டின் இறுதியில், அதன் அளவு 200 மில்லியன் தேங்காய்களாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் உள்ள குரங்குகளை பெறுவதற்காக சீனாவில் மட்டுமல்ல, பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.