NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியாகவுள்ள சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்…!

க.பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நாளை (30) அல்லது நாளை மறுதினம் (1) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை கல்வி அமைச்சர் இன்று (29) பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் பி.வை.ஜி ரத்னசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, உயர்தரப் பரீட்சையும் திட்டமிட்டபடி எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles