NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பத்தாயிரம் ரூபா.

கடந்த சில நாட்களாக தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பல வகையில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக தலா 10,000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.குறித்த விடயத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை உடனடியாக புனரமைப்பதற்கு சுமார் மூன்று பில்லியன் ரூபா ஒதுக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles