NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெள்ளத்தால் விமான சேவைகள் இரத்து.

கெய்மி சூறாவளி மற்றும் பலத்த மழை காரணமாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா மற்றும் அருகிலுள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.சுமார் 13 மில்லியன் மக்கள் வசிக்கும் பிராந்தியத்தில் மக்கள் பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, 114 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சூறாவளி காரணமாக 600,000 இற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.சில பகுதிகளில் தண்ணீர் கழுத்து வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles