இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார எதிர்வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அண்மையில் நெதர்லாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியின் போது, லஹிரு குமார உபாதைக்குள்ளானார். அவர் நாடு திரும்பவுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஹிரு குமாரவுக்கு பதிலாக செஹான் ஆராச்சிகே அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இலங்கை அணியின் வேகபந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரவும் உபாதை காரணமாக உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.
இவருக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க அணியில் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.