எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (09) வரையில் 27 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவர்களுள் 13 பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.
ஏனையவர்களில் ஒருவர் அரசியல் கட்சி சார்பாகவும், ஏனைய 13 பேர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.