NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைத்தியசாலைகளில் செயலிழந்துள்ள MRI ஸ்கேன் இயந்திரங்கள் குறித்து சுகாதார அமைச்சர் விளக்கம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தற்போது பல வைத்தியசாலைகளில் செயலிழந்துள்ள MRI ஸ்கேன் இயந்திரங்கள் உட்பட அத்தியாவசிய இயந்திரங்களை திருத்துவதற்கு 4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

5 மாதங்களாக செயலிழந்து இருந்த அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் எம்.ஆர்.ஐ ஸ்கேனர் பழுதுபார்க்கப்படாமையால் நோய்வாய்ப்பட்டவர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், மஹரகம வைத்தியசாலையில் தானியங்கி ஊசி போடும் இயந்திரம் செயலிழந்தமை தொடர்பிலும் தகவல் வெளியானது.
இதேவேளை, அரசாங்க வைத்தியசாலைகளில் தற்போது 13 எம்.ஆர.;ஐ ஸ்கேன் இயந்திரங்கள் உள்ளதாகவும், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் உள்ள ஒன்று 2 வருடங்களுக்கு முன்னர் செயலிழந்தமையால், தற்போது 11 எம.;ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரங்கள் மாத்திரமே இயங்கி வருவதாக அரசாங்க கதிரியக்க நிபுணர்கள் தொழிநுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தும்பனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு குறிப்பிட்டார்.

Share:

Related Articles