அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 63 ஆக நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, விசேட வைத்தியர்கள், தரப்படுத்தப்பட்ட வைத்திய மற்றும் பல் வைத்திய அதிகாரிகள், அனைத்து வைத்திய நிர்வாக அதிகாரிகள், விசேட பல் வைத்தியர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வைத்திய நிபுணர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.