NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷானி அபேசேகரவை மீண்டும் பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வது குறித்து அரசாங்கம் கவனம்!

ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகரவை மீண்டும் பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வது குறித்து அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.

அதன் பிரகாரம், தற்போதைக்கு பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஷானி அபேசேகரவை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளின் விசாரணைகளை ஷானி அபேசேகரவிடம் ஒப்படைப்பது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

எனினும், ஷானி அபேசேகர தரப்பில் இருந்து இது தொடர்பான விளக்கங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles