NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷாருக்கானின் உருவம் பதித்த தங்க நாணயம் வெளியீடு!

பொலிவுட் சூப்பர் ஸ்டாரான கிங் ஷாருக்கான் இந்திய சினிமாத் துறையின் வசூல் சக்கரவர்த்தி.

கடந்த வருடம் இவர் நடித்த ஜவான், பதான் உள்ளிட்ட திரைப்படங்கள் சுமார் 1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் ஷாருக்கானை மேலும் பெருமைப்படுத்தும் விதமாக அவரது உருவம் பதித்த சிறப்பு தங்க நாணமொன்றை பாரிஸில் உள்ள க்ரெவின் மியூசியம் வெளியிட்டுள்ளது.

இந்த பெருமையை தன் வசப்படுத்திய முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை ஷாருக்கான் தன் வசப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் லோகார்னோ திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles