NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷேக் ஹசீனாவின் உத்தியோகப்பூர்வ இல்லம் அருங்காட்சியகமாக மாற்றம்!

ஷேக் ஹசீனாவின் உத்தியோகப்பூர்வ இல்லமான அரண்மனை, அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனாவின் தவறான ஆட்சி மற்றும் மக்கள் அவரை ஆட்சியிலிருந்து அகற்றியபோது ஏற்பட்ட கோபத்தின் நினைவுகள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதனையடுத்து, பங்களாதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவருக்குக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles