NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிலிருந்து 60 விமானிகள் வெளியேற்றம்!

கடந்த 12 மாதங்களில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் இருந்து 60 விமானிகள் வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஏற்கனவே அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்சில் இருந்துஇ அண்மைய தேசிய பொருளாதார சவால்களுக்கு பின்னர்இ விமானிகளும் கணிசமான அளவில் வெளியேறியுள்ளனர்.

இந்த வெளியேற்றம்இ ஸ்ரீ லங்கன எயார லைன்ஸ் விமான சேவைக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு விமான நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் 30 விமானிகள் தேவைப்படுவதாகவும்இ அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மேலும் 50 விமானிகள் தேவைப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles