ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களில் ஞாயிற்றுக்கிழமை இரு எலிகள் காணப்பட்டதால், விமானங்களை தாமதப்படுத்த அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டதாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகே நேற்று தெரிவித்துள்ளார்.
எலிகள் காணப்பட்ட இரண்டு விமானங்களுக்கு இரசாயனத்தை தெளித்து, சர்வதேச தரத்தின்படி அவற்றை ஒரு நாளுக்கு தரையிறக்க வேண்டியிருந்தது என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் பத்திரகே தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக அமர்வில், விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால, எலிகள் எவ்வாறு விமானத்திற்குள் புகுந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பினார்.
ஆதற்கு பதிலளித்த பத்திரகே, 15 கிரவுண்ட் ஹேண்ட்லிங் ஊழியர்கள் இல்லாததும் காலதாமதத்திற்கு காரணம் என தெரியவந்தது. மூன்று ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளனர், மீதமுள்ள 12 பேர் சாதாரணமாக வேலையிலிருந்து விலகிவிட்டனர் என பதிலளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, விடுமுறைக்கு விண்ணப்பிக்காமல் வேலையை விட்டு விலகியவர்களை பணிநீக்கம் செய்யுமாறு அமைச்சர் சாடினார்.