(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
2022ஆம் நிதியாண்டிற்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அங்கத்துவம் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது,
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிகர வருவானம் ரூ.6.3 பில்லியன் மற்றும் மொத்த வருமானம் ரூ.17.5 பில்லியன் என அறிவிக்கப்பட்டது. இது 2021 வருவாயை விட 120 சதவீதமாகும்.
கடந்த 17ஆம் திகதி அன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது இது அங்கீகரிக்கப்பட்டது.
நிகர வருமானமாக குறிப்பிடப்பட்ட நிதியாண்டில் பெறப்பட்ட 6.3 பில்லியன், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முழு வரலாற்றிலும் ஒரு நிதியாண்டில் பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த வருடாந்திர நிகர வருமானமாகும்.
நிகர வருமானத்தின் சமீபத்திய வளர்ச்சி முக்கியமாக சர்வதேச கிரிக்கெட், உள்நாட்டு கிரிக்கெட், ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மற்றும் ஐசிசி ஆண்டு உறுப்பினர் கொடுப்பனவு போன்ற 4 வருவாய் பிரிவுகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.