NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்ரீ தலதா வழிபாடு இன்று முதல் ஆரம்பம்..!

ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று முதல் ஆரம்பம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “ ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பமாகவுள்ளது. 

இதன் ஆரம்ப நிகழ்வு, இன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொள்ள உள்ளார். 

மேலும், வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள எதிர்பார்ப்பதோடு, அவர்கள் கொழும்பிலிருந்து சிறப்பு புகையிரத மூலம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்களின் அனுசாசனையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட “சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும். 

ஆரம்ப நாளான இன்று (18) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், பக்தர்களுக்கு “தலதா” புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நாளை மறுநாள் (19) முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும். 

இந்த முறை, சிறி தலதா வழிபாட்டுக்காக மூன்று நுழைவாயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இதேவேளை, ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கண்டிக்கு வந்துள்ள யாத்ரிகர்கள், தலதா மாளிகை வளாகத்தில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles