வரலாற்று புகழ் பெற்ற கண்டி ஸ்ரீ தலதா வழிபாட்டிற்குச் சென்ற நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொரு பெண்மணி முச்சக்கரவண்டியொன்று மோதியதில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் குளியாப்பிட்டிய, பண்டாரகம, கலிகமுவ மற்றும் குருநாகல் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அம்பிட்டிய பகுதியில் வரிசையில் நின்றிருந்த பெண்ணொருவரும் ஆணொருவரும், கட்டுக்கஸ்தோட்டை நகருக்கு அருகில் வரிசையில் நின்றிருந்த பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், கண்டி போதனா வைத்தியசாலையில், கடந்த சில தினங்களில் சுகவீனமுற்ற 420 யாத்திரிகர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது