NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்ரீ லங்கன் விமான சேவையை மறுசீரமைக்க நடவடிக்கை…!

ஸ்ரீலங்கன் விமான சேவவையை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையைக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைவாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சு ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களைப் பயன்படுத்தி இந்த டெண்டர் அழைப்புப் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

Share:

Related Articles