NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விவகாரம் – ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்!

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை மீண்டும் பெறுவதற்கான பேச்சுக்களை நடத்தி நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவிற்கு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கீகாரம் அளித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் கிரிக்கெட் விடயத்தில் எந்தவொரு இடைக்காலக் குழு நியமனமும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு அமைத்த அமைச்சர் ரொஷானின் தீர்மானத்தை மீறி ரணில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles