ஹட்டன் – மல்லியப்பு பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளயுள்ளது.
இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 30 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.