NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹப்புத்தளை பிரதேசத்தில் மண்சரிவு – 5 குடும்பங்கள் வெளியேற்றம்

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஹப்புத்தளை பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக ஹப்புத்தளை நிர்வாக கிராம அதிகாரி ஜகத் லியனகே தெரிவித்துள்ளார்.

அப்பிரதேசத்தில் வசிக்கும் 5 குடும்பங்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டு, உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ் அனர்த்தத்தினால் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த இடத்தை ஆய்வு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles