NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹமாஸின் பணயக்கைதிகளில் இலங்கையர்களும்!

ஹமாஸ் குழுவினரால் சுமார் 150 இஸ்ரேலியர்கள் மற்றும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் பணயக் கைதிகளால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைதுசெய்யப்பட்ட அனைவரினதும் விபரங்களையும் வழங்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஹமாஸிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில், இவர்களில் இலங்கையர்கள் உட்பட 36 வெளிநாட்டவர்களும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களின் விபரங்கள் கிடைத்தால், காணாமல் போன இலங்கையர்கள் இருவரைப் பற்றிய தகவலைப் பெற முடியுமென நம்புவதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காஸாவின் வடபகுதியில் வசித்துவந்த 27 இலங்கையர்கள் காஸாவின் தெற்கு பகுதிக்கு பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார அறிவித்துள்ளார்.

காசா பகுதியில் வசிக்கும் ஏனைய பொதுமக்களுடன் இந்த குழுவினர் ரஃபா எல்லை வழியாக எகிப்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles