October 7ம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழு திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நிகழ்த்தியது. ஏராளமானோர் கொல்லப்பட்ட நிலையில், ஹமாஸ் குழுவினர், குழந்தைகளை தீவைத்து எரித்ததாக திடுக்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகின.
ஒருவரின் இறப்பைக் கூடவா இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள் என ஒரு கூட்டம் கோபப்பட, அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவதுபோல, ஒரு பெண், இஸ்ரேல் குழந்தைகள் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டதை மோசமான வகையில் விமர்சித்துள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை எரிக்கப்பட்ட விடயத்தைக் குறித்து சமூக ஊடகம் ஒன்றில் கேலி செய்துள்ள அந்தப் பெண், அந்தக் குழந்தையின் காலை எரிக்கும்போது, அதில் உப்பும் மிளகுத்தூளும் சேர்த்தார்களா? கொத்தமல்லி சேர்த்தார்களா?என்று கேட்டிருந்தார்.
அந்தப் பெண்ணின் பெயர் Warda Anwar. அவர், பிரான்ஸ், பாகிஸ்தான் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்.
Wardaவின் கருத்து சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள நிலையில், பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Dorsmanin, அந்தப் பெண் மீது குற்றவியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.