ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் போரில் சீனா யாருக்கு ஆதரவு வழங்குகின்றது என இதுவரையில் தெளிவாக குறிப்பிடவில்லை.
இது தொடர்பில் சீனா அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளதாவது:
‘இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும். பகைமையை கைவிட்டு பொது மக்களை காக்கவும், தற்போதைய சூழ்நிலை மேலும் மோசமடையாமல் கண்காணிக்கவும் இரு தரப்பையும் கேட்டு கொள்கிறோம். அனைத்து விதமான வன்முறையையும் பொதுமக்களின் மீதான தாக்குதலையும் கண்டிக்கிறோம்’ என குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினரின் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டதன் மூலம் சீனா நடுநிலை வகிக்க முயல்வதாக தெரிவிக்கப்படுகின்றன.