(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஹிங்குரன்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகி 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைக்கு எதிரே உள்ள மாமரத்தில் இருந்த குளவிக்கூடு களைந்தமையால் குளவிக் கொட்டுக்கு மாணவர்கள் இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக 50 மாணவர்கள் ஹிங்குரன்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.